ADDED : மார் 21, 2025 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை; சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை வழங்கிய 70,000 கணக்குகளை நீக்கிஉள்ளதாக செபி தெரிவித்து உள்ளது.
பின்ப்ளூயன்சர் எனப்படும், அதிக லாபம் பெறக்கூடிய முதலீடுகள் குறித்து பரிந்துரைப்பவர்களால், பங்குச் சந்தையில் பணத்தை இழப்பவர்கள் அதிகரிப்பது குறித்த புகார்கள் செபிக்கு வந்தன.
இதையடுத்து, பதிவு செய்யப்படாத முதலீட்டு ஆலோசகர்கள், நிதி ஆராய்ச்சி ஆய்வாளர் கள் மீது செபி நடவடிக்கை துவங்கியுள்ளது.
இணையதளங்களில் பண ஆசை காட்டும் தவறான பதிவுகளை வெளியிடும் 70,000 கணக்குகள் கண்டறியப்பட்டு, நீக்கப்பட்டுள்ளதாக செபியின் முழுநேர உறுப்பினர் ஆனந்த் நாராயண் தெரிவித்துள்ளார்.