ADDED : செப் 06, 2025 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை:தனது பெயரில் மோசடியாக வரும் எஸ்.எம்.எஸ்., இமெயில், சமூகவலைத்தள போலி விளம்பரங்கள் குறித்து முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பங்குச்சந்தை கண்காணிப்பு வாரியமான செபி தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட விபரங்கள், பணம் ஆகியவற்றை பரிமாறிக் கொள்வதில் விழிப்புடன் இருக்க வலியுறுத்தியுள்ளது.
தனது பெயர், லோகோ, லெட்டர்ஹெட், சீல், இமெயில் என பலவற்றை போலியாக பயன்படுத்தி, மோசடியாளர்கள் முதலீட்டாளர்களை ஏமாற்றுவது தனது கவனத்துக்கு வந்துள்ளதாக, செபி கூறியுள்ளது.