ஆதரவு விலையைவிட குறைவாக மண்டியில் பொருட்கள் விற்பனை
ஆதரவு விலையைவிட குறைவாக மண்டியில் பொருட்கள் விற்பனை
ADDED : மே 22, 2025 11:44 PM

மும்பை:பொருட்களின் மொத்த விற்பனை சந்தையான மண்டியில் கொள்முதல் விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவாக உள்ளதாக ரிசர்வ் வங்கியின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் மே மாத செய்தியில் வெளியான தகவல்:
காரீப் மற்றும் ராபி பருவ பயிர்களின் அறுவடை காரணமாக, கோதுமை தவிர முக்கிய உணவுப் பயிர்களின் சராசரி மண்டி விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவாக உள்ளது.
மேலும், இம்மாதம் 19ம் தேதி வரை, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறித்து திரட்டப்பட்ட தரவுகளின் படி, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளின் விலையும் அதிக ஏற்றத்தாழ்வின்றி தொடர்கிறது.
கோதுமை தவிர, முக்கிய உணவுப் பொருட்களின் விலை குறைந்திருப்பது, உணவு பாதுகாப்பிற்கு சிறந்ததாகவே கருதப்படுகிறது.
முக்கிய காய்கறிகளில், வெங்காயத்தின் விலை சரிவை சந்தித்துள்ளது. உருளைக்கிழங்கு, தக்காளி விலை சிறிது அதிகரித்துள்ளது. மறுபுறம், சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. பாமாயில் மற்றும் கடலை எண்ணெய் விலை மிதமான அளவில் இருந்தது.
இவ்வாறு தெரிவித்துஉள்ளது.