செமிகண்டக்டர் சிப் கொள்முதல்; இந்தியாவில் டெஸ்லா முயற்சி
செமிகண்டக்டர் சிப் கொள்முதல்; இந்தியாவில் டெஸ்லா முயற்சி
ADDED : ஏப் 22, 2025 06:59 AM
புதுடில்லி; 'டெஸ்லா' நிறுவன மின்சார கார்களுக்குத் தேவையான செமிகண்டக்டர் சிப்களை கொள்முதல் செய்ய, இந்திய நிறுவனங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சு நடப்பதாக கூறப்படுகிறது.
டாடா குழுமத்தின் 'டாடா எலக்ட்ரானிக்ஸ்' மற்றும் முருகப்பா குழுமத்தின் 'சி.ஜி., செமி' போன்ற இந்திய நிறுவனங்களுடனும், இந்தியாவில் உற்பத்தி ஆலை உள்ள அமெரிக்காவின் 'மைக்ரான்' நிறுவனம் போன்றவற்றுடனும் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.
செமிகண்டக்டர் சிப் தேவைக்கு சீனாவை சாராமல், வினியோக தொடரை விரிவுபடுத்துகிறது டெஸ்லா நிறுவனம்.
மேலும் இறக்குமதி முறையில் மின்சார கார்களை இந்தியாவில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை இந்நிறுவனம் தற்போது எடுத்து வருகிறது. முதற்கட்டமாக, புதுடில்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் விற்பனையை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.