சேவை உற்பத்தி குறியீடு முதல்முறையாக வெளியிடப்பட்டது
சேவை உற்பத்தி குறியீடு முதல்முறையாக வெளியிடப்பட்டது
ADDED : ஜூலை 15, 2026 02:33 AM

புதுடில்லி:ஐ.ஐ.பி., எனப்படும் தொழிற்சாலை உற்பத்தி குறியீடு போல், மத்திய அரசு முதல் முறையாக, ஐ.எஸ்.பி., என்ற சேவை உற்பத்தி குறியீட்டை, சோதனை அடிப்படையில் வெளியிட்டுள்ளது.
இதன் முக்கிய அம்சங்கள்:
* 2026 ஏப்ரல் மாதத்தில், முறையான சேவைத் துறையின் 19 துணை துறைகளில், 14 துறைகள் இரட்டை இலக்க வளர்ச்சி
*மொத்த வணிகம், சில்லரை வணிகம், தங்குமிடம், உணவக சேவைகள், சாலை போக்குவரத்து, விமான போக்குவரத்து, தொலைத்தொடர்பு, வங்கி துறை உள்ளிட்டவை, சேவை துறையில் 60 சதவீத பங்கு
* 2024 - 25 அடிப்படை ஆண்டாக கொண்டு வெளியிடப்பட்ட இந்த சோதனை குறியீட்டின்படி, ரயில்வே, விமான போக்குவரத்தை தவிர மற்ற அனைத்து துணைத் துறைகளும் 2026 ஏப்ரலில் வளர்ச்சி
*பொருளாதார நடவடிக்கைகளில் பாதிக்கும் அதிக பங்களிப்பு வழங்கும் சேவை துறையை துல்லியமாக அளவிடுவதற்கும், நாட்டின் புள்ளிவிபர அமைப்பை வலுப்படுத்துவதற்கும் இந்த ஐ.எஸ்.பி., ஒரு முக்கிய முன்னேற்றம்
* விமான போக்குவரத்து 13.90 சதவீத சரிவையும், ரயில்வே போக்குவரத்து 0.40 சதவீத சரிவையும் கண்டுள்ளன
* புதிய குறியீடு வாயிலாக, நாட்டின் முறையான சேவை துறையின் குறுகிய கால மாதாந்திர செயல்பாடுகளை அளவிடும் வசதி, முதல் முறையாக உருவாகியுள்ளது
* ஜி.எஸ்.டி., மற்றும் நிர்வாக தரவுகளின் அடிப்படையில் இந்த குறியீடு தயாரிக்கப்படுவதால், முறைசார்ந்த துறைகளில் செயல்படும் நிறுவனங்கள் மட்டுமே இடம்பெறும்
*அரசின் முக்கிய சேவைகள், சந்தை சாராத சேவைகள் மற்றும் முறைசாரா சேவை துறைகள் இடம்பெறாது
* இனி, ஒவ்வொரு மாதமும் 29-ம் தேதி சேவை உற்பத்தி குறியீடான ஐ.எஸ்.பி., வெளியிடப்படும்.
அதிக வளர்ச்சி கண்ட முக்கிய துணை துறைகள்: துறை சதவீதம் தங்குமிடம் மற்றும் உணவக சேவைகள் 37.20 சில்லரை வணிகம் 30.80 நிர்வாக மற்றும் ஆதரவு சேவைகள் 28.70 ரியல் எஸ்டேட் 27.70
தகவல்: மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம்
