ADDED : ஜூலை 14, 2026 12:35 AM
30
டெல்லியில் நடைபெற்ற மூன்று நாள் பழக்கண்காட்சியில் மேகாலயா அன்னாசிப் பழங்கள் 30 டன் விற்பனையாகின. மேகாலயாவில் விளைந்த உயர்தர புதிய அன்னாசிப் பழங்கள் இந்தளவு விற்றது சாதனை அளவாகும்.
39,000
நாட்டின் ரியல் எஸ்டேட் துறையில் ஜனவரி - ஜூன் 6 மாதங்களில், 39,000 கோடி ரூபாயை நிறுவன முதலீட்டாளர் முதலீடு செய்தனர். இது இதுவரை இல்லாத உச்சம்.
10
நடப்பு 2026-27 நிதியாண்டின், முதல் காலாண்டில் பி.எஸ்.என்.எல். நிறுவன செயல்பாட்டு வருவாய் 10 சதவீதம் உயர்ந்திருப்பதாக அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
16
இந்தாண்டின் முதல் 6 மாதங்களில், துபாயின் வீடு விற்பனை 16 சதவீத சரிவும் வீடு விலை 6% உயர்வும் கண்டதாக அனராக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
15,000
கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை, நம்நாட்டின் தரவு மையங்கள் 15,000 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்துள்ளன. ஏ.ஐ., பயன்பாடு அதிகரித்தல், கிளவுட் சேவைகள் விரிவாக்கம் உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்தது.
