UPDATED : நவ 05, 2026 12:00 AM
ADDED : நவ 04, 2026 10:54 PM

புதுடில்லி: நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி கடந்த அக்டோபர் மாதத்தில் அதிகரித்து, முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.
சேவைகள் துறை நிறுவனங்களின் தொழில் நிலவரம் குறித்து ஹெச்.எஸ்.பி.சி., நிறுவனம் மாதந்தோறும் பி.எம்.ஐ., அறிக்கை வெளியிட்டு வருகிறது. இம்மாதத்துக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சேவைகள் துறை வளர்ச்சியை குறிக்கும் பி.எம்.ஐ., குறியீடு, முந்தைய செப்டம்பர் மாதத்தில் 55.20 புள்ளிகளாக இருந்த நி லையில், கடந்த அக்டோபர் மாதத்தில் 55.80 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. பி.எம்.ஐ., குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் வளர்ச்சியையும், குறைவாக இருந்தால் சரிவையையும் குறிக்கும்.
சாதகமான தேவை நிலவரம், புதிய வாடிக்கையாளர்களின் வரவு மற்றும் விளம்பர நடவடிக்கைகளின் வெற்றி ஆகியவற்றால் புதிய ஆர்டர்கள் அதிகரித்ததே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
