ADDED : நவ 06, 2024 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:தேவை அதிகரிப்பின் காரணமாக, நாட்டின் சேவைகள் துறை, கடந்த மாதம் வலுவான வளர்ச்சி கண்டுள்ளதாக, எச்.எஸ்.பி.சி., வங்கியின் பி.எம்.ஐ., குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பரில் ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு 57.70 புள்ளிகளாக சரிந்திருந்த சேவைகள் துறை வளர்ச்சி, அக்டோபரில் 58.50 புள்ளிகளாக அதிகரித்துஉள்ளது.
இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியைக் குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவைக் குறிக்கும்.
வளர்ச்சிக்கு காரணங்கள்
தேவை அதிகரிப்பு
வலுவான விற்பனை
ஏற்றுமதி சந்தைகளின் தேவை