தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ சேவைகள் துறை வளர்ச்சி ஆகஸ்டில் சற்றே உயர்வு

 சேவைகள் துறை வளர்ச்சி ஆகஸ்டில் சற்றே உயர்வு

 சேவைகள் துறை வளர்ச்சி ஆகஸ்டில் சற்றே உயர்வு


ADDED : செப் 04, 2026 07:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 07:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சற்று அதிகரித்திருந்தாலும், ஒட்டுமொத்த வளர்ச்சி வேகம் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.

சேவைகள் துறை நிறுவனங்களின் தொழில் நிலவரம் குறித்து எச்.எஸ்.பி.சி., நிறுவனம் மாதந்தோறும் பி.எம்.ஐ., அறிக்கை வெளியிட்டு வருகிறது. இம்மாதத்துக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சேவைகள் துறை வளர்ச்சியை குறிக்கும் பி.எம்.ஐ., குறியீடு, முந்தைய ஜூலை மாதத்தில் 53.30 புள்ளிகளாக இருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 54.10 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. பி.எம்.ஐ., குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் வளர்ச்சியையும், குறைவாக இருந்தால் சரிவையும் குறிக்கும். குறியீடு உயர்ந்திருந்தாலும், மார்ச் 2022க்கு பின் பதிவான இரண்டாவது மிக குறைந்த வளர்ச்சி வேகம் இது.

சந்தையில் நிலவும் கடும் போட்டி, உள்நாட்டு ஆர்டர்கள் குறைவு மற்றும் போக்குவரத்து குறைந்திருப்பது ஆகியவையே இந்த மந்தநிலைக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

இருப்பினும், நிறுவனங்கள் பணியமர்த்தலை தொடர்வதால், வேலைவாய்ப்பு உருவாக்கம் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மேலும், சர்வதேச அளவில் புதிய ஏற்றுமதி ஆர்டர்களும் கணிசமாக உயர்ந்துள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us