ராணுவ தளவாட நிறுவனங்கள் பங்குகள் விலை அதிகரிப்பு பிரதமர் மோடி உரை எதிரொலி
ராணுவ தளவாட நிறுவனங்கள் பங்குகள் விலை அதிகரிப்பு பிரதமர் மோடி உரை எதிரொலி
ADDED : மே 13, 2025 11:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை:இந்தியாவின் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில், சுயசார்பை எட்ட வேண்டிய அவசியம் குறித்து பிரதமர் மோடி வலியுறுத்திய நிலையில், நேற்றைய வர்த்தகத்தின் போது, ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் அதிக உயர்வு கண்டன.
நிப்டி ராணுவ தயாரிப்பு நிறுவனங்களின் குறியீடு 4.12 சதவீதம் உயர்வு கண்டு, 7,432 புள்ளிகளில் நிறைவு செய்தது. ராணுவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள், 3 முதல் 11 சதவீதம் வரை உயர்வு கண்டன.
பாகிஸ்தானின் பயங்கரவாத நிலைகள் மீதான தாக்குதலில், இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை சிறப்பாக செயல்பட்டதாக, ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி பாராட்டு தெரிவித்திருந்த நிலையில், ஆகாஷ் ஏவுகணையின் முக்கிய தயாரிப்பாளரான பாரத் டைனமிக்ஸ் பங்குகள் 11 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து, பங்கு ஒன்றின் விலை 1,750 ரூபாய்க்கு வர்த்தகமானது.