ADDED : செப் 30, 2024 02:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: சர்வதேச அளவில், தேவை மற்றும் முதலீடு அதிகரித்து வருவதால், இந்தியாவில், வெள்ளி விலை 1 கிலோ, 1.10 லட்சம் ரூபாயை விரைவில் தொடுமென நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை இந்தாண்டு 30 சதவீதம் வரை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளி விலை 35 சதவீதம் அதிகரித்து உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளி விலை, கடந்த வியாழன்று கிலோ 94,000 ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டது.
சென்னையில் வெள்ளி விலை, 1 லட்சம் ரூபாயை ஏற்கனவே தாண்டி உள்ளது. அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கை, சீனாவின் பணக்கொள்கை, தொழிற்துறை தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் வெள்ளி விலை, மேலும் புதிய உச்சங்களை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.