நான்கு மாவட்டங்களில் சுற்றுலா முதலீடு தனியாருக்கு 'சிப்காட்' அழைப்பு
நான்கு மாவட்டங்களில் சுற்றுலா முதலீடு தனியாருக்கு 'சிப்காட்' அழைப்பு
UPDATED : ஆக 05, 2025 06:41 AM
ADDED : ஆக 05, 2025 12:32 AM
சென்னை, கன்னியாகுமரி உட்பட நான்கு மாவட்டங்களில் சுற்றுலா முதலீட்டை ஈர்க்கும் வகையில், தங்கும் விடுதி, பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த, விருப்பம் உள்ள முதலீட்டாளர்களுக்கு, தமிழக அரசின், 'சிப்காட்' நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிறுவனம், சுற்றுலா முதலீடுகளை ஈர்க்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளது. இதன்படி, 'சிப்காட்' வழங்கும் இடத்தில், முதலீட்டாளர்கள் சுற்றுலா வசதிகளை ஏற்படுத்த வேண்டும். முதல் கட்டமாக, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, துாத்துக்குடி, ஈரோடு மாவட்டங்களில் சுற்றுலா முதலீடுகளை ஈர்க்கும் பணி துவங்கியுள்ளது.
இதற்காக சிப்காட் ஒதுக்கீடு செய்யும் இடங்களில் சாலை, குடிநீர், சீரான மின் வினியோகம் ஆகிய வசதிகள் வழங்கப்படும். முதலீட்டாளர்கள் தங்கும் விடுதி, பொழுதுபோக்கு பூங்கா, சுற்றுச்சூழல் பூங்கா, கலாசாரம் மற்றும் பாரம்பரிய சுற்றுலா தொடர்பான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

