சிறுதொழில்களின் கடன் தேவை மார்ச் காலாண்டில் 11 சதவிகிதம் உயர்வு கடன் வழங்குவதில் தமிழகம் முன்னிலை
சிறுதொழில்களின் கடன் தேவை மார்ச் காலாண்டில் 11 சதவிகிதம் உயர்வு கடன் வழங்குவதில் தமிழகம் முன்னிலை
ADDED : மே 25, 2025 11:42 PM

புதுடில்லி:நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களின் கடன் தேவை 11 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், ஆனால் மதிப்பின் அடிப்படையில் கடன் வழங்கல் 11 சதவீதம் குறைந்துள்ளதாகவும், 'சிட்பி' வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் தனியார் வங்கிகளின் பங்கு 42 சதவீதம்; பொதுத்துறை வங்கிகளின் பங்கு 39 சதவீதம்
கடந்த மார்ச் காலாண்டில் தனியார் வங்கிகளில் எம்.எஸ்.எம்.இ., கடன் தேவை 8 சதவீதம் அதிகரித்துள்ளது
பொதுத்துறை வங்கிகளில் கடன் தேவை உயர்வு 15 சதவீதமாக இருந்தது
தொகை அடிப்படையில், கடன் வழங்கல் மொத்தமாக 11 சதவீதம் சரிந்துள்ளது
அமெரிக்க வரி விதிப்புகள், இஸ்ரேல் - ஹமாஸ், ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்ட வெளிப்புற காரணிகளால், வங்கிகள் கடன் வழங்குவதில் அதிக எச்சரிக்கை உணர்வு
90 நாட்களுக்கு அதிகமாக கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை, 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 1.79 சதவீதமாக குறைந்துள்ளது
கடன் பெற்றதில் 47 சதவீத நிறுவனங்கள் முதல் முறையாக கடன் வாங்கியுள்ளன
மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம், உத்தர பிரதேசம், டில்லி ஆகிய மாநிலங்கள் மொத்த கடன் வழங்குவதில் 48 சதவீத பங்குடன் முன்னிலை வகிக்கின்றன
தமிழகத்தில் தயாரிப்பு துறை நிறுவனங்களுக்கு அதிக கடன் வழங்கப்பட்டுள்ளது.