ADDED : நவ 07, 2025 01:51 AM

புதுடில்லி:ஸ்மார்ட் போன்கள் விலை 2,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'ஸ்டோரேஜ்' எனப்படும் நினைவகம் விலை உயர்வு, 'சிப்'கள் வினியோக தொடரில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் ஆகியவற்றின் காரணமாக, ஸ்மார்ட் போன் விலை உயர்ந்துள்ளது.
ஸ்மார்ட் போன்களின் மேம்பட்ட புதிய மாடல்கள் விலை, அடுத்த இரண்டு மாதங்களில் 6,000 ரூபாய் அதிகரிக்கும் என தெரிகிறது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சி காண்பதும் ஸ்மார்ட் போன் விலையில் பிரதிபலிக்கிறது. ஸ்மார்ட் போனில் ஏ.ஐ., மீதான ஆர்வம் அதிகரித்து, அதன் சிப் விலை அதிகமாவதால், அதற்கேற்ப விலை உயர்கிறது.
எனவே, கடந்த பண்டிகை கால தள்ளுபடி விற்பனையில் ஸ்மார்ட் போன் வாங்க தவறியவர்கள், தற்போது வாங்கினால் கூடுதல் விலை கொடுக்க நேரிடும் என போன் சில்லரை வர்த்தக சங்கத்தினர் கூறுகின்றனர்.
மொபைல் போன்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி., வரியை, 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைத்தால் நிலைமையை சமாளிக்க முடியும் என்று, அகில இந்திய மொபைல் சில்லரை வர்த்தகர் சங்கம், மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

