ADDED : டிச 20, 2024 11:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:வரும் 2025ம் ஆண்டு சீசனுக்கு, கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சாதாரண கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, குவின்டாலுக்கு 420 ரூபாய் உயர்த்தி, 11,582 ரூபாயாகவும், முழு கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவின்டாலுக்கு 100 ரூபாய் உயர்த்தி, 12,100 ரூபாயாகவும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இதனால், அரசுக்கு 855 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

