தேசிய மீன்பிடி டிஜிட்டல் தளத்தில் உறுப்பினராக சேர சிறப்பு முகாம்
தேசிய மீன்பிடி டிஜிட்டல் தளத்தில் உறுப்பினராக சேர சிறப்பு முகாம்
UPDATED : பிப் 13, 2025 11:12 PM
ADDED : பிப் 13, 2025 11:11 PM

தேசிய மீன்பிடி டிஜிட்டல் தளத்தில் உறுப்பினராக சேர்வதற்காக நாடு தழுவிய சிறப்பு முகாம், இன்று முதல் வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.
மத்திய அரசு நடத்தும் இந்த முகாமில், மீனவர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள் மற்றும் மீன் விற்பனை, பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு, குறு நிறுவனங்கள் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.
அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து, மீனவர்கள் அதிகளவில் வசிக்கும் பகுதிகளில் முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில பதிவு செய்தவர்கள், 'பிரதான் மந்திரி மத்ஸ்ய கிசான் சம்ரிதி சஹ் யோஜனா' திட்டத்தின் கீழ் கடன், காப்பீடு உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை பெற முடியும். தேசிய மீன்பிடி டிஜிட்டல் தளத்தில், 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை பதிவு செய்துள்ளனர்.

