ADDED : ஏப் 08, 2025 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னைதமிழகத்தில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கும் பணியை, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் மேற்கொள்கிறது. தமிழகத்தில் சுற்றுலா துறையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில், 20,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கவும், 25 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்படி, பொழுது போக்கு சுற்றுலா, கடலோர சுற்றுலா உள்ளிட்ட, 12 சுற்றுலா பிரிவுகளின் கீழ் பொழுதுபோக்கு பூங்கா, ஹோட்டல், மாநாட்டு கூடம் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு ஈர்க்கப்பட உள்ளது.
எனவே, சுற்றுலா துறையில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களில் முதலீடு களை தொடர்ந்து கண்காணித்து, அவற்றின் முதலீட்டை ஈர்க்க, வழிகாட்டி நிறுவனத்தில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார்.

