sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

'ஸ்பைஸ்ஜெட்' கட்டண நிலுவை வங்கதேசம் வான்வெளி தடை

/

'ஸ்பைஸ்ஜெட்' கட்டண நிலுவை வங்கதேசம் வான்வெளி தடை

'ஸ்பைஸ்ஜெட்' கட்டண நிலுவை வங்கதேசம் வான்வெளி தடை

'ஸ்பைஸ்ஜெட்' கட்டண நிலுவை வங்கதேசம் வான்வெளி தடை


ADDED : பிப் 20, 2026 01:55 AM

Google News

ADDED : பிப் 20, 2026 01:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாக்கா: வான்வெளியை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை செலுத்தாததால், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது வான்வெளி மற்றும் விமான நிலையங்களை பயன்படுத்த வங்க தேசம் தடை விதித்துள்ளது.

இதனால் கொல்கட்டாவில் இருந்து குவஹாத்தி, இம்பால் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானங்கள், மாற்றுப்பாதையாக நீண்ட வழித்தடங்களை பயன்படுத்த நேரிட்டுள்ளது.

புதிய பாதையில் பயணிக்கும் போது எரிபொருள், உள்ளிட்ட செலவுகள் அதிகமாகும் என விமான போக்குவரத்து துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

குறைந்த கட்டண பயணியர் விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் வங்க தேச வான்வெளி கட்டணம் செலுத்த முடியாமல் நிதி நெருக்கடியில் உள்ளதை இது காட்டுகிறது.

இது குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், கட்டண நிலுவை தொகை மற்றும் விமான நிலைய பயன்பாடு குறித்து வங்கதேச அதிகாரிகளுடன் பேச்சு நடைபெறுவதாகவும், இந்த வழக்கமான தொழில்துறை பிரச்னைக்கு தீர்வை காண ஆக்கப்பூர்வமாக செயல்படுவதாகவும் கூறி உள்ளது.

மேலும் பயணியர் விமான இயக்கத்தில் சிக்கல் ஏதும் இல்லை என்றும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த டிச., வரையிலான மூன்று மாதங்களில் இந்நிறுவனம், 239.27 கோடி ரூபாய் இழப்பை சந்தித்த நிலையில் பல்வேறு நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது.






      Dinamalar
      Follow us