மத்திய அரசின் விசாரணை வளையத்தில் 'ஸ்ரீ சிமென்ட்'
மத்திய அரசின் விசாரணை வளையத்தில் 'ஸ்ரீ சிமென்ட்'
ADDED : ஜன 03, 2026 02:47 AM

மும்பை: மத்திய பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சகம், கம்பெனிகள் சட்டம் - 2013ன் கீழ், விசாரணைக்கு தேவையான குறிப்பிட்ட தகவலை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக, பங்குச்சந்தையில் 'ஸ்ரீ சிமென்ட்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் டாப் 3 சிமென்ட் நிறுவனங்களில் ஒன்றான திகழும், கொல்கட்டாவைச் சேர்ந்த ஸ்ரீ சிமென்ட் நிறுவனம், மேலும் தெரிவித்துள்ளதாவது:
மத்திய பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சகம், தன் விசாரணையின் ஒரு பகுதியாக குறிப்பிட்ட தகவலை அளிக்குமாறு நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. எந்தவொரு குற்றச்சாட்டுகள் அல்லது விதிமீறல்கள் மற்றும் முரண்பாடுகள் குறித்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
குறிப்பிட்ட காலத்தில், கம்பெனிகள் நல அமைச்சகம் கேட்டு கொண்ட தகவலை அளிப்போம். மேற்கண்ட விசாரணையால், நிறுவனத்தின் நிதிநிலை அல்லது வர்த்தக செயல்பாடுகள் அல்லது பிற செயல்பாடுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

