ஜவுளித்துறை பி.எல்.ஐ., திட்டம் மார்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம்
ஜவுளித்துறை பி.எல்.ஐ., திட்டம் மார்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜன 03, 2026 02:49 AM

புதுடில்லி: ஜவுளித்துறை நிறுவனங்கள், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் புதிதாக விண்ணப்பிப்பதற்கான அவகாசம், வரும் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
செயற்கை இழை ஆடைகள், எம்.எம்.எப்., பேப்ரிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி ஆகிய பிரிவுகளில் ஈடுபட்டுள்ள ஜவுளி நிறுவனங்கள், பி.எல்.ஐ.,திட்டத்தில் விண்ணப்பிப்பதற்காக கடந்தாண்டு ஆகஸ்டில் மீண்டும் போர்ட்டல் திறக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, புதிதாக விண்ணப்பிக்க அவகாசத்தை கடந்த, டிச.31 வரை நீட்டித்து கடந்த அக்டோபரில், மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், இந்திய ஜவுளித்துறை மீது முதலீட்டாளர் நம்பிக்கை அதிகரித்து வருவதுடன், பல்வேறு தகுதியான நிறுவனங்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில், திட்டத்தில் இணைவதற்கான அவகாசத்தை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

