ADDED : ஆக 21, 2025 11:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளில் வாகனம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நாடுகளின் முதலீட்டை ஈர்க்க, முதல்வர் ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் ராஜா மற்றும் உயரதிகாரிகள், வரும் 30ம் தேதி அங்கு செல்கின்றனர்.
இவர்கள், இரு நாடுகளிலும் வாகனங்கள், வாகன உதிரிபாகங்கள், பசுமை மின் திட்டங்கள், உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தி க் கின்றனர்.