குளிர் ஆடை உற்பத்தி முயற்சிக்கு 'ஸ்டார்ட்அப் இந்தியா' அழைப்பு
குளிர் ஆடை உற்பத்தி முயற்சிக்கு 'ஸ்டார்ட்அப் இந்தியா' அழைப்பு
ADDED : அக் 15, 2025 02:33 AM

திருப்பூர், அக். 15-
வெப்பத்தை தணிக்கும் குளிர் ஆடை உற்பத்திக்கான ஆய்வுகள் துவங்கியுள்ளதால், புதிய தொழில்நுட்ப ஆடை உற்பத்திக்கு முயற்சிக்கலாம் என, 'ஸ்டார்ட்அப் இந்தியா' அழைப்பு விடுத்துள்ளது.
உலகளவில், நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், மனிதர்களின் உடல்நல மற்றும் சரும பராமரிப்பும் சவாலாக மாறி வருகிறது.
வடிவமைப்பு பணி வெப்பத்தை தணிக்க, 'ஏசி'யை மட்டுமே சார்ந்திருக்காமல், வெப்பத்தை தணிக்கும் வகையிலான குளிர் ஆடைகளை உற்பத்தி செய்ய புதிய தொழில்நுட்ப வடிவமைப்பு பணியும் துவங்கியுள்ளது.
இதற்காக, ஹாங்காங் பாலிடெக்னிக் பல்கலையில், குளிர் ஆடை உற்பத்தி தொடர்பான ஆய்வுகள் துவங்கியுள்ளன.
அதில், ஆடை உற்பத்தி, நீடித்த நிலைத்தன்மை மற்றும் தொழில்நுட்பம் ஒன்றிணைந்த முயற்சியாக, பல்வேறு நாடுகளும் உற்றுநோக்குகின்றன. குளிர்ச்சியை அளிக்கும் ஆடைகள், மனித உடலில் வெப்பத்தை குறைக்க உதவுகின்றன.
உடல் வெப்பநிலை உலக அளவில், 'ஸ்மார்ட் டெக்ஸ்டைல்' என்ற தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. அதன்படி, தொழிலாளர் முதல் முதியோர் வரை பயன்படுத்தும் குளிர் ஆடை உற்பத்திக்கான முயற்சி நடந்து வருகிறது.
ஏ.ஐ., தொழில்நுட்பமும் இணைந்தால், அணிபவரி ன் உடல் வெப்பநிலைக்கு ஏற்ப குளிர்விக்கும் தன்மை யுள்ள ஆடைகளை உற்பத்தி செய்யலாம் என்றும் 'அடல் இன்னோவேஷன் மிஷன்' போன்ற திட்டங்கள் வாயிலாக, இதற்கு இளைஞர்கள் முயற்சிக்க வேண்டும் என்றும் 'ஸ்டார்ட்அப் இந்தியா' தெரிவித்துள்ளது.