ADDED : மே 03, 2025 11:56 PM

புதுடில்லி:கடந்த ஏப்ரல் மாதத்தில், இந்திய ஸ்டார்ட்அப்
நிறுவனங்களில், கிட்டத்தட்ட 6,330 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக,
'என்டிராக்கர்' நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர அடிப்படையில், இதுவே கடந்த ஓர் ஆண்டில் மிகக் குறைந்த
முதலீடாகும்.
நடப்பாண்டு துவக்கம் முதலே ஏற்ற இறக்கங்களைக் கண்டு
வரும் ஸ்டார்ட்அப் முதலீடுகள், கடந்த ஏப்ரல் மாதத்தில் கடும் சரிவை
சந்தித்து உள்ளன. கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில், இந்திய ஸ்டார்ட்அப்களில்
8,750 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்தது.
முதலீட்டாளர்கள்,
பங்குச் சந்தை முதலீடுகளின் மீது அதிக ஆர்வம் காட்டியதும், அதிக மதிப்பு
கொண்ட ஒப்பந்தங்களின் எண்ணிக்கை குறைந்ததுமே, முதலீடு குறைய முக்கிய
காரணமாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் ஸ்டார்ட்அப் நிறுவனங்களிடையே,
மொத்தம் 116 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதில் 12 கையகப்படுத்தல்
மற்றும் இணைத்தல்களும் அடங்கும். வளர்ச்சி நிலையில் உள்ள ஸ்டார்ட்அப்
நிறுவனங்களே கிட்டத்தட்ட 75 சதவீத முதலீடுகளை திரட்டின.
மாதங்கள் முதலீடுகள் (ரூ. கோடியில்)
2025
ஜனவரி 14,960
பிப்ரவரி 6,833
மார்ச் 9,690
ஏப்ரல் 6,333