ADDED : ஜூலை 25, 2025 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் உள்ள, 'ஸ்டார்ட்அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி, முதலீடு, சந்தை வாய்ப்பு உள்ளிட்ட உதவிகளை தமிழக அரசின் ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவனம் செய்கிறது.
இந்நிறுவனம் மற்றும் ஐ.சி.ஏ.ஐ., எனப்படும் இன்ஸ்டியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்டஸ் ஆப் இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இதன் வாயிலாக, தமிழகத்தில் உள்ள ஸ்டார்ட் அப் எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு, நிதி தொடர்பான ஆலோசனைகளை ஐ.சி.ஏ.ஐ., வழங்கும்.