நிதி திரட்ட திணறும் ஸ்டார்ட்அப்கள் 9 மாதங்களில் 23 சதவீதம் சரிவு
நிதி திரட்ட திணறும் ஸ்டார்ட்அப்கள் 9 மாதங்களில் 23 சதவீதம் சரிவு
UPDATED : செப் 27, 2025 12:34 AM
ADDED : செப் 26, 2025 11:56 PM

பெங்களூரு:நாட்டில் உள்ள தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், நடப்பாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 68,000 கோடி ரூபாய் மட்டுமே நிதி திரட்டியுள்ளதாக பங்குச் சந்தை புலனாய்வு நிறுவனமாக 'டிராக்சன்' தெரிவித்து உள்ளது. இது கடந்தாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 23 சதவீதம் குறைவு.
![]() |
அமெரிக்க வரி விதிப்பின் காரணமாக உள்நாட்டு பொருளாதார சூழல் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டுள்ளதால், துணிகர முதலீடுகள் குறைந்திருப்பது இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
துணிகர முதலீடு என்பது அதிக வளர்ச்சியடையக்கூடிய திறன் கொண்ட தொடக்க நிலை ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதாகும்.
நிதி திரட்டுவது குறைந்துள்ள போதிலும், அதிக நிதி திரட்டிய நாடுகளின் பட்டியலில் ஜெர்மனி மற்றும் பிரான்சை பின்னுக்கு தள்ளி இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
நடப்பாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், 4 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 8,800 கோடி சந்தை மதிப்பு கொண்டதற்கான, யுனிகார்ன் அந்தஸ்தை பெற் றுள்ளன.
![]() |