'உருக்கு இறக்குமதி பூஜ்யமாகி ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும்'
'உருக்கு இறக்குமதி பூஜ்யமாகி ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும்'
ADDED : ஏப் 24, 2025 11:52 PM

புதுடில்லி:உருக்கு துறையின் இலக்கு, 'பூஜ்ய இறக்குமதி, நிகர ஏற்றுமதி' என்பதாக இருக்க வேண்டும் என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
'இந்தியா ஸ்டீல் 2025' மாநாட்டில், காணொலி வாயிலாக பிரதமர் பேசியதாவது:
இந்தியாவின் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் உருக்குத் துறை உள்ளது. 5 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரமாக மாறுவதற்கான இந்தியாவின் போட்டியில், உருக்குத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
அனைத்து அரசு திட்டங்களிலும், தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உருக்கு மட்டுமே பயன்படுத்த கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
உற்பத்தியை மறுவடிவமைத்து, உலக உருக்கு சந்தையில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதற்கு தேவையான யோசனைகளை பங்குதாரர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். உருக்குத் துறையின் இலக்கு 'பூஜ்ய இறக்குமதி, நிகர ஏற்றுமதி' என்பதாக இருக்க வேண்டும்.
உலக அரங்கில் போட்டித்தன்மையுடன் இருக்க, இத்தொழில் எதிர்காலத்திற்கு தயாராக இருக்க வேண்டும்.
மேலும், ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமைகளில் முதலீடு செய்ய, பொதுத்துறை நிறுவனங்களுடன், தனியார்துறை நிறுவனங்களும் பங்கேற்க வேண்டும். இந்தியாவின் உருக்குத் துறை புதிய அத்தியாயத்தின் உச்சத்தில் உள்ளது.
இவ்வாறு தெரிவித்து உள்ளார்.