பங்கு சந்தை நிலவரம் : வரி விதிப்பு உறுதியானதால் சரிவு
பங்கு சந்தை நிலவரம் : வரி விதிப்பு உறுதியானதால் சரிவு
ADDED : ஆக 27, 2025 01:33 AM

பங்கு சந்தை நிலவரம் வரி விதிப்பு உறுதியானதால் சரிவு
வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ், நிப்டி இரண்டும் தலா ஒரு சதவீதம் சரிவு கண்டன. இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு இன்று முதல் 25 சதவீதம் கூடுதல் வரி வசூலிப்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, முதலீட்டாளர்கள்பங்குகளை அதிகளவு விற்றனர்.
ஜி.எஸ்.டி., வரி அடுக்கு குறைக்கப்படும் என்ற செய்தியைத் தொடர்ந்து கடந்த வாரம் பங்குச் சந்தைகள் நல்ல உயர்வு கண்டன. இதைத்தொடர்ந்து, முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டும் நோக்கில் பங்குவிற்பனையில் இறங்கியதும் சரிவுக்கு வழி வகுத்தது. அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேற்றம், மற்ற சர்வதேச சந்தைகளின் நிலவரமும் இந்திய பங்குச் சந்தைகளில்பிரதிபலித்தது.
உலக சந்தைகள்
திங்களன்று அமெரிக்க சந்தைகள் இறக்கத்துடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, தென் கொரியாவின் கோஸ்பி, ஹாங்காங்கின் ஹேங்சேங், சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் அனைத்தும் சரிவுடன் முடிவடைந்தன.ஐரோப்பிய சந்தைகளும் சரிவுடன் வர்த்தகமாகின.
சரிவுக்கு காரணங்கள்
1 அமெரிக்காவின் 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு
2அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேற்றம்
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 6,516 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.48 சதவீதம் உயர்ந்து, 67.78 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 பைசா சரிந்து, 87.69 ரூபாயாக இருந்தது.

