ADDED : ஜூலை 09, 2025 10:38 PM

எச்சரிக்கை உணர்வால் சரிவு
வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தைகள்,
நாள் முழுவதும் ஏற்ற இறக்கம் கண்டு, இறுதியில் சிறிய சரிவுடன் முடிவடைந்தன.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த எதிர்பார்ப்புகள் நிலவினாலும்,
நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளின் மீது முதலீட்டாளர்களின் கவனம்
திரும்பியுள்ளது.
காப்பர் இறக்குமதியின் மீது 50 சதவீத வரி விதிக்க
உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, ஹிந்துஸ்தான்
காப்பர், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலை
சரிந்தது. மருந்து பொருட்களின் மீதும் 200 சதவீத வரி விதிக்க உள்ளதாக
அறிவித்திருந்த நிலையில், அவை பெரிய பாதிப்பை சந்திக்கவில்லை.
வேதாந்தா
நிறுவனத்தின் மீது அமெரிக்காவின் வைஸ்ராய் நிறுவனம் குற்றச்சாட்டுகளை
முன்வைத்தைத் தொடர்ந்து வேதாந்தாவின் பங்கு விலை 3 சதவீதத்துக்கும்
கூடுதலாக சரிந்தது.
உலக சந்தைகள்
செவ்வாயன்று அமெரிக்க
சந்தைகள் குறிப்பிடத்தக்க மாற்றமின்றி முடிவடைந்தன. ஆசிய சந்தைகளை
பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, தென்கொரியாவின் கோஸ்பி உயர்வுடனும்;
சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., ஹாங்காங்கின் ஹேங்சேங் குறியீடுகள்
சரிவுடனும் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.
வீழ்ச்சிக்கு காரணங்கள்
காலாண்டு முடிவுகளையொட்டி முதலீட்டாளர்கள் எச்சரிக்கை
ஐ.டி., எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் அதிகளவு விற்பனை
உயர்வு கண்ட பங்குகள் - நிப்டி (%)
ஸ்ரீராம் பைனான்ஸ் 1.76
பஜாஜ் பைனான்ஸ் 1.44
கோல் இந்தியா 1.31
சரிவு கண்ட பங்குகள் - நிப்டி (%)
எச்.சி.எல்., டெக் 2.05
ஹிண்டால்கோ 1.83
டாடா ஸ்டீல் 1.71
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 71கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று வாங்கி இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.51 சதவீதம் சரிந்து, 70.51 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 பைசா உயர்ந்து, 85.67 ரூபாயாக இருந்தது.
நிப்டி: 25,476.10
மாற்றம்: 46.40 இறக்கம் சிவப்பு
சென்செக்ஸ்: 83,536.08
மாற்றம்: 176.43 இறக்கம் சிவப்பு