UPDATED : ஆக 14, 2025 06:16 AM
ADDED : ஆக 14, 2025 01:59 AM

பணவீக்கம் சரிந்ததால் ஏற்றம்
வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன. உலகளாவிய சந்தை போக்குகளின் தொடர்ச்சியாக, நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின.
ஜூலை மாதத்துக்கான சில்லரை விலை பணவீக்கம், 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்தது. இதன் காரணமாக, ஆர்.பி.ஐ., ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் குறைக்க வாய்ப்பு அதிகம் என்ற காரணத்தால், முதலீட்டாளர்கள் முன்னணி நிறுவனங்களின் பங்குகளை அதிகளவு வாங்கினர். இதனால், நாள் முழுதும் நிப்டி, சென்செக்ஸ் உயர்வுடன்
வர்த்தகமாகின.
உலக சந்தைகள்
செவ்வாயன்று அமெரிக்க சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, தென் கொரியாவின் கோஸ்பி, சீனாவின் ஷாங்காய்
எஸ்.எஸ்.இ., ஹாங்காங்கின் ஹேங்சேங் குறியீடுகள் உயர்வுடன் முடிவடைந்தன.
ஐரோப்பிய சந்தைகளும் உயர்வுடன் வர்த்தகமாகின.
உயர்வுக்கு காரணங்கள்
1 உலகளாவிய சந்தைகளில்சாதகமான சூழல் நிலவியது
2பணவீக்கம் சரிந்ததால்,ரெப்போ வட்டி குறைய வாய்ப்பு அதிகரிப்பு
3முன்னணி நிறுவன பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம்
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 3,644 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு0.36 சதவீதம் குறைந்து, 65.88 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 பைசா அதிகரித்து, 87.47 ரூபாயாக இருந்தது.