
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் இறங்குமுகத்துடன் முடிந்தது. வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 200 புள்ளிகள் குறைந்து, 82,331 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 42 புள்ளிகள் குறைந்து, 25,020 புள்ளியாக இருந்தது. எனினும், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் ஏறுமுகத்துடன் முடிந்தன.
வங்கித்துறை, ஐ.டி., உள்ளிட்ட துறைகளில் முதலீட்டாளர்கள் லாபம் பார்ப்பதில் ஈடுபட்டனர். சர்வதேச நிச்சயமற்ற தன்மையை மீறி, முதலீட்டாளர்கள் எச்சரிக்கையான நேர்மறை அணுகுமுறை கொண்டிருந்தனர். வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.