
இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் இறங்கு முகத்துடன் முடிந்தது. தொடர்ந்து இரண்டாம் நாளாக இறங்குமுகம் கண்ட நிலையில், வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 502 புள்ளிகள் குறைந்து. 81,758 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி, 143 புள்ளிகள் குறைந்து, 24,968 புள்ளியாக இருந்தது.
வங்கித்துறை பங்குகள் இறங்குமுகம் கண்டன. அண்மை நிதி நிலை முடிவுகள் எதிர்பார்த்த அளவு இல்லாதது முதலீட்டாளர்கள் மத்தியில் தாக்கம் செலுத்தியது. வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டினர்.
ஏறுமுகம் கண்ட பங்குகள்
1. பஜாஜ் பைனான்ஸ்- 941.85 (1.94)
2. டாடா ஸ்டீல்- 162.50 (1.14)
3. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி- 1,426.50 (0.52)
இறங்குமுகம் கண்ட பங்குகள்
1. ஆக்சிஸ் வங்கி- 1,099.10 (5.24)
2. பாரத் எலெக்- 394.70 (2.34)
3. பார்தி ஏர்டெல்- 1,901.05 (1.49)