
இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் சரிவுடன் முடிந்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இறங்குமுகம் கண்ட நிலையில், வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 586 புள்ளிகள் குறைந்து, 80,600 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி, 203 புள்ளிகள் குறைந்து, 24,565 புள்ளியாக இருந்தது.
உலோகம், ஐ.டி,., தொலைத்தொடர்பு துறை பங்குகள் இறங்குமுகம் கண்டன. இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்காவின் வர்த்தக வரிவிதிப்பு சர்வதேச சந்தையில் தாக்கம் செலுத்தியது. வெளிநாட்டு நிதிகழக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டினர்.
ஏறுமுகம் கண்ட பங்குகள்
1. டிரெண்ட்- 5,182.05 (3.24)
2. ஆசியன் பெயிண்ட்ஸ்- 2,429.45 (1.40)
3. எச்.யூ.எல்.,- 2,551.35 (1.17)
இறங்குமுகம் கண்ட பங்குகள்
1. சன்பார்மா- 1,629.05 (4.49)
2. டாடா ஸ்டீல்- 153.00 (3.04)
3. மாருதி சுசூகி- 12,299.35 (2.65)
-