அடுத்தடுத்து வரும் பண்டிகைகள்; வெல்லம் மூட்டை ரூ.2,000 ஆனது
அடுத்தடுத்து வரும் பண்டிகைகள்; வெல்லம் மூட்டை ரூ.2,000 ஆனது
ADDED : ஆக 21, 2026 07:07 AM

சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை சந்தைக்கு, தினமும் சராசரியாக, 200 டன் உருண்டை வெல்லம் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது. அங்கு கடந்த மாதம், 30 கிலோ கொண்ட ஒரு மூட்டை வெல்லம், 1,400 ரூபாய் வரை விற்ற நிலையில் படிப்படியாக விலை அதிகரித்தது. இரு வாரங்களுக்கு முன், 1,650 ரூபாயாக உயர்ந்தது. தொடர்ந்து நேற்று நடந்த ஏலத்தில், 30 கிலோ மூட்டை, 1,900 முதல், 2,000 ரூபாய் வரை விலைபோனது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:
அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளதால், வெல்ல தேவை அதிகரிக்கும் என எதிர்பார்த்து, போட்டி போட்டு பலரும் ஏலம் எடுத்தனர். சமீபகாலமாக சர்க்கரை விலை அதிகரித்து வருவதால், பல்வேறு உணவு, தின்பண்ட தயாரிப்பு நிறுவனங்கள், நாட்டு வெல்லத்தை அதிகளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளன. இதுவும் சந்தையில் கூடுதல் தேவையை ஏற்படுத்தியுள்ளது.
