ADDED : அக் 07, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மா ற்றுத்திறன் மாணவர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்க, தமிழக உயர்கல்வித்துறை சார்பில் , தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லுாரியில், 'சுடரொளி' மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சுடரொளி மையத்தை, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று திறந்து வைத்தார். மாணவர் சேர்க்கை உட்பட, வளர்ச்சி பணிகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பேராசிரியர்களுக்கு , 'நல் ஆசான்' விருது வழங்கப்பட்டது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு மையம், மாற்றுத்திறனாளி நல கமிஷனரகம் ஆகியவை இணைந்து, ஆண்டுதோறும் 60 மாற்றுத்திறன் மாணவ - மாணவியருக்கு, எலக்ட்ரிக்கல் துறை சார்ந்த திறன் பயிற்சிகளை வழங்க உள்ளது.
பயிற்சிக்குப்பின், திறன் மேம்பாட்டு மையம் சார்பில், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது .