ADDED : ஜன 18, 2025 11:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:நடப்பாண்டு கரும்பு சீசனில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 14 சதவீதம் சரிவைக் கண்டுள்ளதாக, 'சென்ட்ரம்' அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அக்டோபர் முதல் செப்டம்பர் வரை கரும்பு சீசனாக கணக்கிடப்படுகிறது. மேலும், அதில் கடந்தாண்டு சீசனில், 3.18கோடி மெட்ரிக் டன் சர்க்கரை உற்பத்தி நடைபெற்ற நிலையில், நடப்பாண்டு கரும்பு சீசனில் மொத்த சர்க்கரைஉற்பத்தி 2.70 கோடி மெட்ரிக் டன்னாக குறைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
அதிகளவில் எத்தனால் உற்பத்திக்கு மாற்றப்பட்டதால், போதிய கரும்பு கையிருப்பு குறைந்ததே, சர்க்கரை உற்பத்தி சரிவுக்கு காரணமாக கூறப்பட்டுள்ளது.

