ADDED : டிச 18, 2024 01:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:நடப்பு சந்தை பருவ ஆண்டில், டிசம்பர் 15 வரையிலான காலகட்டத்தில், சர்க்கரை உற்பத்தி 17 சதவீதம் குறைந்துள்ளதாக, இந்திய சர்க்கரை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பான 'இஸ்மா' தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய நடப்பு சந்தை ஆண்டில், டிசம்பர் 15 வரையிலான காலகட்டத்தில் சர்க்கரை உற்பத்தி, 17 சதவீதம் குறைந்து 61.39 லட்சம் டன் ஆக உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 74.05 லட்சம் டன்னாக இருந்தது.
உற்பத்தி வீழ்ச்சி மற்றும் கரும்பு அரவை தாமதம் உள்ளிட்ட காரணங்களினால், சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளது. நடப்பாண்டு, எத்தனால் தயாரிக்க வழங்கப்படவுள்ள சர்க்கரையின் அளவு, 40 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.