ADDED : மார் 28, 2025 01:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'சுந்தரம் கிளேட்டன்' நிறுவனம், ஓசூரில் உள்ள அதன் அலுமினிய டை - காஸ்டிங் வணிகத்தை, குர்கானை தளமாகக் கொண்ட சந்தார் அஸ்காஸ்ட் நிறுவனத்துக்கு, 163 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக,
நாளைக்குள் 113 கோடி ரூபாய் முன்கூட்டியே செலுத்தப்படும். மேலும், மீதமுள்ள 50 கோடி ரூபாய் ஏப்ரல் 15ம் தேதிக்குள் செலுத்தப்படும் என, பங்குச் சந்தைகளுக்கான தாக்கலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தார் அஸ்காஸ்ட் நிறுவனம், சந்தார் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்; உதிரிபாகங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இரு நிறுவனங்களும் ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தின்படி, வருகிற 31ம் தேதிக்குள் இப்பரிவர்த்தனைகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.