ADDED : ஜன 30, 2025 11:38 PM

சென்னை:செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சேவை நிறுவனமான சூப்பராப்ஸ், 'சி தொடர்' நிதி திரட்டலில், 216 கோடி ரூபாய் திரட்டியுள்ளது.
சூப்பராப்ஸ் நிறுவனம் 2020ல் துவங்கப்பட்டு செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில், புதுமையான யோசனைகள் மற்றும் நவீன சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. மேலாண்மை சேவை நிறுவனங்களின் சேவைத் திறனை அதிகரித்து, வணிகத்தை பெருக்குவது இதன் நோக்கம்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நவீன சேவை வழங்கும் சூப்பராப்ஸ், தற்போது சி தொடரில் 216 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.
'மார்ச் கேப்பிடல்' தலைமையில் 'அடிஷன், இசட்47' ஆகிய முதலீட்டாளர்களால் கிடைக்கப்பெற்ற இந்த முதலீடு, நிறுவனத்தின் வர்த்தக முன்னேற்றம், தொழில்நுட்ப ஆளுமை ஆகியவற்றின் அதிவேக வளர்ச்சிக்கு உதவும் என, சூப்பராப்ஸ் நிறுவன இணை நிறுவனர் அரவிந்த் பார்த்திபன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு, 'மோனிகா' என்ற அதிநவீன செயற்கை நுண்ணறிவு யுக்தி வாயிலாக, புதிய ஆலோசனைகள் வழங்கும் வழிகாட்டி அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

