ADDED : டிச 14, 2024 12:17 AM

'ஸ்விங் ஸ்டெட்டர்' நிறுவனம், 45க்கும் மேற்பட்ட நவீன இயந்திரங்களை காட்சிப்படுத்தி உள்ளது. இதில், பாறைகள், கற்களை நொறுக்கும் கிரஷர், எக்ஸ்கவேட்டர்கள், மின்சார கான்கிரீட் பம்ப் உள்ளிட்ட ஏழு இயந்திரங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஐந்து கான்கிரீட் கலவை இயந்திரங்களுக்கு, புதிய பி.எஸ்., - 5 இன்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, அடுத்த ஆண்டு வருமான வளர்ச்சியை 20 சதவீதம் அதிகரிக்க உள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், 2024ம் ஆண்டுக்கான வருமானம், 5,600 கோடி ரூபாயாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்விங் ஸ்டெட்டர் இந்தியா நிறுவனம், கான்கிரீட் தயாரிப்பு முதல் அதன் போக்குவரத்து வரை உள்ள அனைத்துக்கும் தேவையான இயந்திரங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இவை தவிர, பலவகை கிரேன்கள், பூம் லிப்ட், டிரில்லர், வீல் லோடர் உள்ளிட்ட இயந்திரங்களின் விற்பனை மற்றும் பராமரிப்பையும் இந்தியாவில் மேற்கொண்டு வருகிறது.
அறிமுகங்கள்
1. டிரான்சிட் மிக்ஸர் எம் - 14
2. எலக்ட்ரிக் காக்கிரீட் பம்ப் எஸ்.பி., 718டி
3. ஜா கிரஷர் - எஸ்-.ஜெ.சி., 350
4. கோன் கிரஷர் எஸ்-.சி.சி., 250
5. எக்ஸ்கவேட்டர் எக்ஸ்.இ., 80 சி பிரோ
6. எக்ஸ்கவேட்டர் எக்ஸ்.எப்., - 215
7. டயர் ரோலர் - எக்ஸ்.பி., - 24ஹெச்