ஈரோடு, திருப்பூரில் 'தாட்கோ'வின் தயார் நிலை தொழிற்கூடங்கள்
ஈரோடு, திருப்பூரில் 'தாட்கோ'வின் தயார் நிலை தொழிற்கூடங்கள்
ADDED : ஜூலை 23, 2025 11:51 PM

சென்னை:தமிழக அரசின், 'சிப்காட்' நிறுவனத்தைப் பின்பற்றி, தொழில் நிறுவனங்கள் விரைவாக தொழில் துவங்க வசதியாக, பொது - தனியார் கூட்டு முயற்சியில் தயார் நிலை தொழிற்கூடங்களை, 'தாட்கோ' நிறுவனம் அமைக்கிறது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகில் ஈங்கூரில் 6.57 ஏக்கரிலும்; திருப்பூர் மாவட்டம் முதலிபாளையத்தில் 5 ஏக்கரிலும் பொது - தனியார் கூட்டு முயற்சியில், தயார் நிலை தொழிற்கூடங்களை 'தாட்கோ' எனப்படும் தமிழக ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் அமைக்க உள்ளது.
இதற்கான கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. தாட்கோ நிலத்தில் தயார் நிலை தொழிற் கூடத்தை, கூட்டு நிறுவனம் தன் செலவில் அமைத்து, 45 ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும். பின் தாட்கோவிடம் திரும்ப வழங்க வேண்டும். இதன் வாயிலாக, தாட்கோ நிறுவனத்துக்கு குத்தகை வருவாய் கிடைக்கும்.