ADDED : ஜூன் 13, 2025 12:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், திருச்சியில் மணப்பாறை, தேனி ஆகிய இடங்களில் மாபெரும் உணவு பூங்காக்களை, 'சிப்காட்' எனப்படும் தமிழக அரசின் தொழில் முன்னேற்ற நிறுவனம் அமைத்துள்ளது.
இவற்றில் இதுவரை 16 நிறுவனங்கள், 1,025 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன. திண்டிவனத்தில், 'டாபர்' இந்தியா நிறுவனம் அதிக அளவாக, 400 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
நுகர்பொருட்கள் விற்பனையில் முன்னிலை வகிக்கும் யுனிலீவர் நிறுவனத்தின் முதலீட்டை சிப்காட் உணவு பூங்காக்களில் ஈர்ப்பதற்காக அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
யுனிலீவரின் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பிரிவின் தொழிற்சாலையை, மணப்பாறை தொழில் பூங்காவில் அமைக்க பேச்சு நடத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.