ADDED : செப் 24, 2024 08:12 AM

சென்னை: ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே இந்தியர்கள் காலணி வாங்குவதாக தோல் பொருட்கள் ஏற்றுமதி கழக செயல் இயக்கு னர் ஆர்.செல்வம் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
மத்திய அரசின் தோல் பொருட்கள் ஏற்றுமதி கழகம், தமிழக அரசுடன் இணைந்து, 'சோல்ஸ் பார் சோல்ஸ்' பெயரில், போதையில்லா சமூகத்தை உருவாக்கும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை, வரும் 29ம் தேதி காலை சென்னையில் நடத்த உள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்., முதல் ஆக., வரை தோல் பொருட்கள் 15,673 கோடி ரூபாய்க்கு தோல் பொருள் ஏற்றுமதியான நிலையில், இதில் தமிழகத்தின் பங்கு, 30 சதவீதம். உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் தனிநபர் காலணி பயன்பாடு குறைவு.
அமெரிக்கர்கள் சராசரியாக ஆண்டுக்கு 9 ஜோடி காலணி வாங்குகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் அது ஏழாகவும், சீனாவில் மூன்றாகவும் உள்ளன. ஆனால், இந்தியர்கள் ஆண்டுக்கு 2 முறை மட்டுமே காலணி வாங்குகின்றனர்.
வரும் 2030ல், ஆண்டுக்கு சராசரியாக 4 முறை இந்தியர்கள் காலணி வாங்குவர். இதனால் கூடுதலாக, 15 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய தோல் பொருட்கள் துறையில் 44 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்
தோல் பொருட்கள் உற்பத்தியில் அதிகளவில் பெண்கள் உள்ளனர்
உள்நாட்டு காலணி உற்பத்தி ஆண்டுக்கு 205 கோடி ஜோடிகள்.