தமிழக கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி ரூ.43,000 கோடியாக அதிகரிக்க இலக்கு
தமிழக கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி ரூ.43,000 கோடியாக அதிகரிக்க இலக்கு
ADDED : ஜூலை 03, 2025 11:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் இருந்து கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியை, தற்போதுள்ள 7,000 கோடி ரூபாயில் இருந்து 43,000 கோடி ரூபாயாக அதிகரிக்க, அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழக கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி மதிப்பு ஆண்டுக்கு சராசரியாக, 7,000 கோடி ரூபாயாக உள்ளது. இதை பல மடங்கு அதிகரிக்க, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.
இதற்காக, இந்த துறையில் முதலீடுகளை ஊக்குவிக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், 'கடல்சார் உணவு பொருட்கள் பதப்படுத்தும் கொள்கை'யை அரசு வெளியிட உள்ளது.
இதுதொடர்பாக, தொழில் துறை அமைச்சர் ராஜா, தொழில் துறை செயலர் அருண்ராய், மீன்வளத் துறை செயலர் சுப்பையன் உள்ளிட்ட அதிகாரிகள், சென்னையில் நேற்று முன்தினம், கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.