ADDED : மே 20, 2025 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : தமிழகத்திற்கு பெரிய தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் பணிகளை, தமிழக அரசின், 'கைடன்ஸ்' எனப்படும் வழிகாட்டி நிறுவனம் மேற்கொள்கிறது.
இந்நிறுவனம், அமெரிக்கா, ஜெர்மனி, தென்கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ள முதலீட்டாளர்களுக்கு, தமிழகத்தில் தொழில் துவங்க நேரடி வழிகாட்டுதல், ஆதரவு சேவை வழங்கும் வகையில் அந்நாடுகளில் 'கைடன்ஸ் டெஸ்க்' எனப்படும் அமர்வை அமைக்க உள்ளது.
இதன்படி, வியட்நாமில் வழிகாட்டி நிறுவனத்தின் அமர்வை, அந்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க சென்றுள்ள தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா துவக்கி வைத்தார்.
இந்த அமர்வில், தமிழக பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு உள்ள நபர், வியட்நாமில் உள்ள நிறுவனங்களை தொடர்புகொண்டு, தமிழகத்தில் தொழில் துவங்க, அரசு அளிக்கும் சலுகைகள் தொடர்பான விபரங்களை தெரிவிப்பார்.