தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ 'போர்டு' அதிகாரிகளுடன் பேச்சு நடத்திய தமிழக அரசு

 'போர்டு' அதிகாரிகளுடன் பேச்சு நடத்திய தமிழக அரசு

 'போர்டு' அதிகாரிகளுடன் பேச்சு நடத்திய தமிழக அரசு

1


ADDED : ஜூலை 11, 2026 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2026 06:52 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் உள்ள ஆலையில், வாகன இன்ஜின் உற்பத்தியை விரைவாக தொடங்குவது குறித்து, 'போர்டு' நிறுவன அதிகாரிகளுடன், தமிழக அரசு அதிகாரிகள் பேச்சு நடத்தியுள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த போர்டு நிறுவனத்திற்கு மறைமலை நகரில், கார் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு, 2 லட்சம் கார், 3.40 லட்சம் கார் இன்ஜின்கள் உற்பத்தி செய்யும் திறன் உடையது. அங்கு உற்பத்தி செய்யப்பட்ட கார்களும், இன்ஜின்களும், பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

கடந்த, 2021ல் அந்த ஆலையை போர்டு நிறுவனம் மூடியது. இந்த ஆலையை மீண்டும் இயக்க அதன் அதிாரிகளுடன், கடந்த தி.மு.க., ஆட்சியில் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். பின், மறைமலை நகர் ஆலையில், 3,250 கோடி ரூபாய் முதலீட்டில் இன்ஜின் உற்பத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆண்டு இறுதியில் அரசு - போர்டு இடையே கையெழுத்தானது.

தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது.

எனவே, உற்பத்தியை விரைவாக தொடங்குவது தொடர்பாக, 'போர்டு' நிறுவனத்துடன், அதிகாரிகள் பேச்சு நடத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us