பெண் பணியாளர்களுக்கு தங்குமிடம் தமிழக அரசு, டாடா பவர் ஒப்பந்தம்
பெண் பணியாளர்களுக்கு தங்குமிடம் தமிழக அரசு, டாடா பவர் ஒப்பந்தம்
ADDED : செப் 20, 2024 01:19 AM

சென்னை,:திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான், 'சிப்காட்' தொழில் பூங்காவில் அமைக்கப்பட உள்ள குடியிருப்பு வளாகத்தில், 'டாடா பவர்' ஆலையில் பணிபுரியும், 500 பெண்கள் தங்குமிடம் அமைக்க, தமிழக 'இண்ட்ஸ்டரியல் ஹவுசிங்' நிறுவனம் மற்றும் டாடா பவர் இடையே சென்னையில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழக அரசின் சிப்காட் மற்றும் தமிழக உட்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனம் ஆகியவை 'டைடல் பார்க்' நிறுவனத்துடன் இணைந்து, தமிழக இண்டஸ்ட்ரியல் ஹவுசிங் என்ற முகமையை 2022ல் துவக்கின.
கங்கைகொண்டான் சிப்காட் தொழில் பூங்காவில், டாடா பவர் சோலார் நிறுவனம், 313 ஏக்கரில், 'சோலார் பி.வி.செல் மற்றும் மாட்யூல்' உற்பத்தி ஆலையை, 4,300 கோடி ரூபாய் முதலீட்டில் அமைத்துள்ளது.
அங்கு பணிபுரிபவர்களில், 80 சதவீதம் பெண்கள். அவர்களில், 500 பெண் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் தங்குமிடம் அமைக்க தொழில் துறை அமைச்சர் ராஜா முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.