ADDED : மே 10, 2025 12:35 AM

நடப்பாண்டின் முதல் நான்கு மாதங்களில், மின்சார கார் விற்பனை, 40 சதவீதம் உயர்ந்து, 46,997 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, வாகன பதிவேடு தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மஹாராஷ்டிரா முதலிடத்திலும், தமிழகம் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
அதிகபட்சமாக, மஹாராஷ்டிராவில், 7,867 மின்சார கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து, கர்நாடகா, கேரளா, புதுடில்லி உள்ளிட்ட மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில், 3,919 மின்சார கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டை விட, 49 சதவீதம் அதிகம்.
இந்திய அளவில், தென் மாநிலங்களில் மட்டும், 16,070 மின்சார கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நாட்டின் பிற மாநிலங்களில் மின்சார மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை அதிகம் என்பதால், மொத்த மின் வாகன விற்பனையில் தமிழகம் 5வது இடத்தில் உள்ளது.