ADDED : மார் 28, 2025 01:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:நடப்பு 2024 -- 25 நிதியாண்டில், ஏப்., முதல் பிப்., மாதம் வரையிலான காலத்தில், நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில், தமிழகம், 1.08 லட்சம் கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளது.
இதுகுறித்து, தொழில் துறை அமைச்சர் ராஜா அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
இந்த நிதியாண்டில் பிப்., வரையிலான காலகட்டத்தில் எலக்ட்ரானிக்ஸ் துறையில், தேசிய ஏற்றுமதியில், தமிழகம் 37 சதவீத பங்களிப்பை வழங்கி உள்ளது.
கடந்த 2021ல், 15,996 கோடி ரூபாயாக இருந்த தமிழக எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, இன்று 1.07 லட்சம் கோடி ரூபாயை தாண்டி உயர்ந்து வருகிறது.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.