'டான்சி' பொருட்கள் விற்பனை ரூ.100 கோடியை தாண்டியது
'டான்சி' பொருட்கள் விற்பனை ரூ.100 கோடியை தாண்டியது
ADDED : மே 10, 2025 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக அரசின் 'டான்சி' நிறுவனத்தின் விற்பனை, தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, 100 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. கடந்த நிதியாண்டில், அந்நிறுவனத்தின் நிகர லாபம், 13 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ், 'டான்சி' எனப்படும் தமிழக சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் செயல்படுகிறது.
இந்நிறுவனம், எக்கு மற்றும் மரத்தினால் செய்யப்பட்ட கட்டில், மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை தயாரித்து, அரசு நிறுவனங்கள், தனியார் மற்றும் பொதுமக்களுக்கு விற்கிறது.
மேலும், பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் விடுதிகளுக்கு தேவையான வகுப்பறை பொருட்களையும் உற்பத்தி செய்கிறது.