ADDED : ஏப் 01, 2025 07:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை; டாடா குழுமத்தின் 'டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ்' நிறுவனம், பிரிட்டனின் 'ஆர்டிபெக்ஸ் இன்டீரியர் சிஸ்டம்ஸ்' நிறுவனத்தின் 80 சதவீத பங்குகளை, 827 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது.
இதை, டாடா குழும நிறுவனமான, ஜாகுவார் லேண்ட்ரோவர் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் வாயிலாக கையகப்படுத்தியுள்ளது.
இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், சீட் ஆர்ம்ரெஸ்ட், கிளவ் பாக்ஸ் மற்றும் இதர உட்புற உபகரணங்களை உற்பத்தி செய்வதில் ஆர்டிபெக்ஸ் நிறுவனம் சிறந்து விளங்குகிறது.
ஜாகுவார் லேண்ட்ரோவர், பி.எம்.டபிள்யூ., பெண்ட்லீ, டொயோட்டா உள்ளிட்ட சொகுசு கார் நிறுவனங்களுக்கு வினியோகம் செய்து வருகிறது.

